திமுக சார்பில் போட்டியிட விண்ணப்ப மனுக்கள்  அளித்துள்ளவர்களிடம் வரும் 17-ஆம் தேதி நேர்காணல்

by Admin / 16-03-2026 01:14:15am
திமுக சார்பில் போட்டியிட விண்ணப்ப மனுக்கள்  அளித்துள்ளவர்களிடம் வரும் 17-ஆம் தேதி நேர்காணல்

திமுக சார்பில் போட்டியிட விருப்பமான அளித்தவர்களுக்கான நேர்காணல் மார்ச் 17ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு. க .ஸ்டாலின் தலைமையில் நடைபெறும். இந்த நேர்காணலில் 17-ஆம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. பதினெட்டாம் தேதி காலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் மாலையில் மதுரை ,தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது. நேர்காணலுக்கு வரக்கூடிய வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களையோ அல்லது பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும் குறிப்பிட்ட தேதிகளில் அந்தந்த மாவட்ட கழக செயலாளர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் பிற நிர்வாகிகள் வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

 

 

Tags :

Share via