ஆவின் டிலைட் பாலை திணிப்பதா? வானதி கண்டனம்

by Staff / 20-11-2023 05:17:31pm
ஆவின் டிலைட் பாலை திணிப்பதா? வானதி கண்டனம்

ஊட்டச்சத்தை குறைத்து விலை உயர்த்தி ஆவின் பால் விற்கப்படுவது ஏற்புடையதல்ல என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பச்சை உறை பால் விற்பனையை வரும் 25ஆம் தேதியுடன் நிறுத்தவும், அதற்கு மாறாக ஆவின் டிலைட் என்ற பாலை அறிமுகம் செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் ஆவின் நிறுவனத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை மாற்றி அதற்கு மாற்றாக 3.5% கொழுப்பு சத்து கொண்ட ஆவின் டிலைட் திணிக்கப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories