ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரை பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றார்.

by Admin / 19-01-2026 11:50:49pm
 ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரை பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றார்.

இன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் சேக் முகமது பின் சையத் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் காரணமாக புது டெல்லிக்கு அரசு முறை பயணமாக வந்தார். அவரை டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடி கட்டி தழுவி உற்சாகமாக வரவேற்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான கோட்டான்மையை மேலும் வலுப்படுத்துவது மற்றும் வர்த்தகம் முதலீடு எரிசக்தி பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு நாடுகளும் பரஸ்பரம் ஒப்பந்தம் செய்ய உள்ளன. இந்த பயணத்தின் போது ஆண்டுதோறும் 5 லட்சம் மேட்ரி டன் திறவை இயற்கை எரிவாயு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எழுத்தாகின. அமீரக அதிபராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் மூன்றாவது இந்திய பயணம் இதுவாகும் மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இது அவரது ஐந்தாவது இந்திய வருகை ஆகும் சந்திப்பின்போது பிரதமர் மோடி அமிர்த அதிபருக்கு குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய வேலைப்பாடுகள் கொண்ட ஊஞ்சல் மற்றும் காஷ்மீரின் பஸ்மினா சால்வை ஆகியவற்றை பரிசாக வழங்கினார். ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

 ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரை பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றார்.
 

Tags :

Share via

More stories