காசாவில் சிசுக்களின் உயிர்கள்.. கவலையில் மருத்துவர்கள்

by Staff / 24-10-2023 11:57:54am
காசாவில் சிசுக்களின் உயிர்கள்.. கவலையில் மருத்துவர்கள்


காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களை அடுத்து, காசா பகுதியில் நிலைமை மிகவும் பரிதாபமாக மாறியுள்ளது. இந்த தாக்குதல்களில் 2,055 குழந்தைகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா மருத்துவமனைகளில் உள்ள இன்குபேட்டர்களில் உள்ள குழந்தைகள் குறித்து NICU மருத்துவர்கள் கவலையடைந்துள்ளனர். அல்-ஷிஃபா மருத்துவமனையின் மருத்துவர் நாசர் புல்புல் கூறுகையில், இன்குபேட்டர்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் பல குழந்தைகள் இறக்க நேரிடும். இது கொடுமையான தருணம் என கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo