ஆவடியில் தடம் புரண்ட மின்சார ரயில்

by Staff / 24-10-2023 12:00:27pm
ஆவடியில் தடம் புரண்ட மின்சார ரயில்

சென்னையில் இன்று  உள்ளூர் மின்சார ரயில் தடம் புரண்டது. ஆவடியில் இருந்து பீச் ஸ்டேஷனுக்கு செல்லும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. நான்கு பெட்டிகளும் தடம் புரண்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவை அனைத்தும் காலி பெட்டிகளாக இருந்தன, பயணிகள் யாரும் இல்லை. இதன் காரணமாக 3 விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இன்னும் சில மணி நேரத்தில் ரயில் போக்குவரத்து சரி செய்யபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via