பாகிஸ்தான் விமானப்படை மற்றும் ட்ரோன்கள் மூலம் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் திடீர் வான்வழி தாக்குதல்.

by Staff / 22-02-2026 12:32:18pm
பாகிஸ்தான் விமானப்படை மற்றும் ட்ரோன்கள் மூலம் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் திடீர் வான்வழி தாக்குதல்.

இன்று அதிகாலை பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் திடீர் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. ஆப்கானிஸ்தானின் நங்கர் கார் மற்றும் பக்தி கா மாகாணங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஒரு மத பள்ளி இலக்கு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 17 முதல் 28 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் தாலிபன் அரசு தெரிவித்துள்ளது குறிப்பாக பேக்சுத்து மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்குள் சமீபத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பதிலடியாக அங்கு பதுங்கி இருந்த தெக்ரீத் -இ - தாலிபா ன்பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஏழு முகன்களை குறி வைத்து பாகிஸ்தான் உறையூர் துறை துல்லியமாக தாக்கியுள்ளது ஆப்கானிஸ்தான் எல்லையை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டித்து தாலிபான் அரசு இதற்கு தக்க நேரத்தில் தக்க பதிலடி வழங்கும் என்று எச்சரித்துள்ளது.

பாகிஸ்தான் விமானப்படை மற்றும் ட்ரோன்கள் மூலம் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் திடீர் வான்வழி தாக்குதல்.
 
Tags :

Share via