பயங்கர தீ விபத்து.! 1000 விலங்குகள் எரிந்து பலி

by Staff / 11-06-2024 04:39:57pm
பயங்கர தீ விபத்து.! 1000 விலங்குகள் எரிந்து பலி

பாங்காக்கில் உள்ள புகழ்பெற்ற திறந்தவெளி சத்துசாக் சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 1000 விலங்குகள் உயிரிழந்ததாக தெரிகிறது. பறவைகள், நாய்கள், பூனைகள் மற்றும் பாம்புகள் இதில் அடங்கும். வளர்ப்பு கூண்டுகளில் இருந்த எலிகள் மற்றும் மலைப்பாம்புகளும் எரிந்து சாம்பலாயின. ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இந்த விபத்தில் தொழிலாளர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

 

Tags :

Share via