காந்தியை மக்கள் மறக்காமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த நிகழ்ச்சி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரையில் காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மக்கள் நீதி மையம் சார்பாக அதன் தலைவர் கமலஹாசன் ஏற்பாடு செய்த மறவோம் மகாத்மா காந்தியின் நினைவை என்கிற நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறுகட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் முதலமைச்சர் பேசும்பொழுது கமலஹாசன் எடுத்து அழைப்பை தம்மால் மறுக்க முடியாது என்று குறிப்பிட்டதோடு சினிமாவில் கமலஹாசன் பேசிய மறதி ஒரு தேசிய வியாதி என்ற வசனத்தை மேற்கோள் காட்டி காந்தியை மக்கள் மறக்காமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக மத்திய அரசு திட்டங்களில் இருந்து காந்தியின் பெயரை நீர்க்கப்படுவதை விமர்சித்த முதலமைச்சர் வரும் மார்ச் 1ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடியிடம் மதுரை மெட்ரோ மற்றும் எய்ம்ஸ் குறித்த கேள்விகளை மக்கள் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Tags :



















