கல்குவாரியில் மணி சரிவு - 2 பேர் பலி

by Staff / 08-02-2024 04:20:22pm
கல்குவாரியில் மணி சரிவு - 2 பேர் பலி

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பெரும்பாக்கத்தில் கல்குவாரியில் வெடி வைக்க பள்ளம் தோண்டிய போது மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி அய்யனார் (26), ராஜேந்திரன் என்ற இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via