தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சமாதானம் படுத்தும் முயற்சியில் பாமக புள்ளிகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்றைய முன் தினம் செய்தியாளர் சந்திப்பில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி நீக்கம் செய்து அந்த பொறுப்பை தானே வகிப்பதாக கூறினார். இந்த செய்தி அண்புமணியின் ஆதரவாளர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தொடர்ந்து இரு தினங்களாக கட்சி முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த சமாதானம் படுத்தும் முயற்சியில் இறங்கினர்.இந்நிலையில் தற்பொழுது இது சம்பந்தமாக யாரும் என்னை வந்து பார்க்கவேண்டாம் என நம்புகிறேன் ராமதாஸ் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சமாதானம் படுத்தும் முயற்சியில் பாமக புள்ளிகள்.