வழக்கறிஞர் கொலை வழக்கில் சரணடைந்த 3பேர் ஆஜர் - வழக்கறிஞர்கள் முற்றுகை

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்த 3பேரை தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷ், தலைமையிலான சிப்காட் போலீசார் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்தனர்.அப்போது நீதிமன்றவாயிலில் வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் செல்வின் தலைமையில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அப்போது ஒரு வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டு ஒரு வாரம் ஆகியும் குற்றவாளிகளை இன்று வரை கைது செய்யவில்லை. கொலை குற்றவாளிகளை கைது செய்யாமல், கோர்ட்டில் சரணடைந்தவர்களை அழைத்து வந்துள்ளனர் என கோசமிட்டு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.உடனடியாக டிஎஸ்பி சுரேஷ் வழக்கறிஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம் என்று உறுதி அளித்தார்.பின்னர் போலீசார் 3பேரையும் நீதிமன்றத்திற்குள் அழைத்துச் சென்றனர். வழக்கறிஞர்களின் போராட்டத்தால் நீதிமன்ற வளாகத்தில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வழக்கறிஞர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் இன்று தொடர்ந்து 3வது நாளாக பணிப்புறக்கணிப்பு போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :