வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் மயங்கி கிடப்பதாக நினைத்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. பெண்ணின் உடலில் காயங்கள் உள்ளதால் கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். சந்தேகத்தின் பேரில் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் விசாரிக்கப்படுகிறது.
Tags :