நீலகிரி, கோவை. திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு.

மத்திய மகாராஷ்டிராவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு திசையில் நகர்ந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்.
Tags : நீலகிரி, கோவை. திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு.