குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் அருவியில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அருவியின் முன்னர் உள்ள பாலத்தில் நின்று போட்டோ மற்றும் செல்பி எடுத்துச் செல்கின்றனர். நீர்வரத்து குறைந்த பின்னர் குளிக்க அனுமதிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்
Tags : குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை