காய்கறி விற்பனை குறித்து இணையத்தில் அறியலாம் ககன்தீப் சிங்!

by Editor / 26-05-2021 10:05:48am
காய்கறி விற்பனை குறித்து இணையத்தில் அறியலாம்  ககன்தீப் சிங்!

சென்னையில் காய்கறி விற்பனையாளர்களின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் பகுதியில் காய்கறி, பழங்கள் விற்பனை குறித்த விவரங்கள் இதன் மூலம் அறியலாம்.சென்னையில் காய்கறி விநியோகம் செய்வோரின் செல்போன் எண், பெயர், விவரங்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் தள்ளுவண்டிகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் தொடர்பு எண்கள் நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை, பிரெட் ஆகியவற்றையும் கொண்டு செல்ல வேண்டும். மக்களின் தேவைகள் கருதி வியாபாரிகள் முட்டை, பிரெட் போன்றவற்றையும் கொண்டு செல்ல வேண்டும். அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட மாநகராட்சி சார்பில் ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via