அர்ஜென்டினாவில் பயங்கர நிலநடுக்கம்

அர்ஜென்டினாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், நிலநடுக்கம் சான் அன்டோனியோ டி லாஸ் கோப்ரெஸைத் தாக்கியது. லாஸ் கோப்ரெஸ் நகருக்கு வட-வடமேற்கில் 84 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சிலியின் இக்யுக் என்ற இடத்திலும் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் கடந்த சில தினங்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags :