கேரளாவில் 41 ஆயிரத்தை தாண்டிய கொரானா பாதிப்பு.

by Writer / 21-01-2022 07:45:40pm
கேரளாவில் 41 ஆயிரத்தை தாண்டிய கொரானா பாதிப்பு.

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 41,668 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு பதிவாகியுள்ளது.

 

மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏற்கனவே உயிரிழந்து இறப்பு கணக்கில் சேர்க்கப்படாத 73 உயிரிழப்புகள் தற்போது மறு கணக்கீட்டின் படி தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 51,607 2 ஆக அதிகரித்துள்ளது.

 

அதே சமயம் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 17,053 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52,76,647 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் தற்போது 2,23,548 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

Tags :

Share via
Logo