ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு குற்றச்சாட்டு- அரசு கவிழும் அபாயம்
பிரதமர் நரேந்திர மோடி மீது மராட்டிய கூட்டணி அரசின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஏக்நாத் ஷிண்டே, ”400 தொகுதிகளில் வெல்வோம் என மோடி பேசியதால் மராட்டியத்தில் பாதிப்பு ஏற்பட்டது. மக்களிடையே அரசியலமைப்பு சட்டத்தை மாற்றப் போகிறார்கள் என்றும் இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் என்றும் அச்சம் நிலவியது. இதனால், என்டிஏ கூட்டணி படுதோல்வி அடைந்தது என கூறியுள்ளார். ஏக்நாத் ஷிண்டேவின் வெளிப்படையான குற்றச்சாட்டால் மகாராஷ்ட்ராவில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Tags :



















