திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

by Staff / 31-01-2024 03:51:54pm
திருநெல்வேலி -  மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் சேவை ஜனவரி மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) பிப்ரவரி 04, 11, 18, 25 மற்றும்  மார்ச் 3, 10, 17, 24, 31ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 07.45 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) பிப்ரவரி 5, 12, 19, 26, மார்ச் 04, 11, 18, 25 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு புதன்கிழமை (ஜனவரி 31) காலை 8 மணி முதல் துவங்க இருக்கிறது.

 

Tags :

Share via