பாசிஸ்ட்டுகளுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் - உதயநிதி

by Staff / 15-11-2023 03:14:15pm
பாசிஸ்ட்டுகளுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் - உதயநிதி

கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டின் இரு சக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து உதயநிதி தனது சமூவலைதளப்பக்கத்தில், :மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக இந்த பேரணி அமையும். கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories