இன்று பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக மலேசியாவிற்கு செல்கிறார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக மலேசியாவிற்கு செல்கிறார். கடந்த 2024 ஆகஸ்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பரஸ்பர கூட்டாண்மைக்கு பிறகு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் இணைந்து வர்த்தகம் முதலீடு பாதுகாப்பு குறை கடத்திகள் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார். பயணத்தின் ஒரு பகுதியாக பத்தாவது இந்திய -மலேசிய சிஇஓ மன்றம் நடத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து உரையாட உள்ளார். கோலாலம்பூரில் உள்ள 15,000 முதல் 18 ஆயிரம் பேர் பங்கேற்கும் மிகப்பெரிய இந்திய வம்சாவளியினர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். இது பிரதமரின் மூன்றாவது மலேசிய பயணமாகும்.
Tags :



















