தனியார் வங்கியில் மேலாளர் திறந்தவெளி குழியில் விழுந்து உயிரிழந்தாா். மூவரை டெல்லி அரசு உடனடியாக இடைநீக்கம்
மேற்கு டெல்லி ஜனக்புரி பகுதியில் ஜல் போர்டு மூலம் தோண்டப்பட்ட சுமார் 15 முதல் 20 அடி ஆழமுள்ள திறந்தவெளி குழியில் பைக்கில் வந்த போது விழுந்து, 25 வயதுடைய கமல் தியானி 15 முதல் 20 அடி ஆழமுள்ள திறந்தவெளி குழியில் பைக்கில் வந்த போது விழுந்து உயிரிழந்தாா். இவர் தனியார் வங்கியில் மேலாளராகபணியாற்றி.வந்தார். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு இல்லாத காரணத்திற்காக, ஒரு நிர்வாகப் பொறியாளர் ஒரு உதவிப் பொறியாளர் மற்றும் ஒரு இளநிலைப் பொறியாளர்ஆகிய மூவரை டெல்லி அரசு உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது.டெல்லி குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா சம்பவ இடத்தை ஆய்வு செய்த பிறகு இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திய தனியார் ஒப்பந்த நிறுவனம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. போதிய தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அங்கு வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தர விடப் பட்டுள்ளது.
Tags :



















