ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் படுதோல்வி

by Staff / 04-06-2024 05:41:49pm
ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் படுதோல்வி

ராமநாதபுரத்தில் பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ் படுதோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி முதலிடம் பிடித்தார். காலையில் இருந்தே பின்னடைவை சந்தித்து வந்த ஓபிஎஸ் தோல்வியைச் சந்தித்து இருப்பது அவரது தொண்டர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ்-க்கு அடுத்தப்படியாக அதிமுக மூன்றாவது இடத்தையும், நாம் தமிழர் கட்சி 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo