கருகலைப்பு மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி பலி

by Staff / 06-11-2023 04:27:18pm
கருகலைப்பு மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி பலி

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 7 மாத கர்ப்பிணியாக இருந்த ரமணா 3வது குழந்தையை கலைக்க முடிவு செய்த நிலையில், அவர் மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். மாத்திரை சாப்பிட்டபின் அவரது கருவில் வளர்ந்த சிசு உயிரிழந்தது, தொடர்ந்து ரமணாவுக்கு அதிகப்படியாக ரத்தப்போக்கு ஏற்பட்டு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு ரத்தப்போக்கு நிற்காத நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் 7 மாத கருவை கலைக்க மாத்திரை கொடுத்த மருத்துவர் தேன்மொழி, சக்தி தேவி, வெற்றி செல்வி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo