இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

by Staff / 08-03-2024 02:49:16pm
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

19 நாட்களாக மறியல் போராட்டங்களை நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதல்வர் விரைவில் அழைத்து பேசுவார் என நம்புகிறோம் என இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு இயக்க பொதுச் செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வு, மாணவர் நலன் கருதி போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

 

Tags :

Share via

More stories