மீனவா்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்

by Staff / 09-08-2023 05:43:56pm
மீனவா்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் திங்கள்கிழமை கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் திங்கள்கிழமை கடிதம் எழுதினாா். கடித விவரம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவது தொடா் நடவடிக்கையாக இருக்கிறது. கடந்த ஜூலை 9-இல் ராமேசுவரத்தைச் சோந்த மீனவா்கள் 15 போ, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். தற்போது, நாகப்பட்டினத்தைச் சோந்த 10 மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். அப்பாவி மீனவா்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இலங்கை கடற்படையினா் தொடா் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். இது மீனவா்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு 10 மீனவா்களையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

 

Tags :

Share via

More stories

Logo