வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின்தொடங்கி வைத்தார்

by Admin / 02-01-2026 04:47:52pm
வைகோவின் சமத்துவ நடைபயணத்தை  முதலமைச்சர் மு க ஸ்டாலின்தொடங்கி  வைத்தார்

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை மைதானத்தில் நடந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசும்பொழுது வைகோவின் நெஞ்சுரத்தையும்வேகத்தையும் பார்க்கும்போது அவருக்கு 82 வயதா,,, அல்லது 28 வயதா,, என்ற சந்தேகம் எழுகிறது என்று புகழாரம் சூட்டியதோடு நானும் வைகோவும் திராவிட இயக்க பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு இது போன்ற பணிகளில் அவர் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

 திருச்சியில் தொடங்கி மணப்பாறை திண்டுக்கல் வழியாக ஜனவரி 12ஆம் தேதி மதுரையில் இந்த நடைபயணம் நிறைவடைகிறது. இந்த சமத்துவ நடைபயணத்தில் சாதி மத பேதமற்ற சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தவும் போதை பொருள் ஒழிப்பு மற்றும் சமத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ,வீசிக தலைவர் திருமாவளவன், காதர் மைதீன் ,துரை வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வைகோவின் சமத்துவ நடைபயணத்தை  முதலமைச்சர் மு க ஸ்டாலின்தொடங்கி  வைத்தார்
 

Tags :

Share via