9 நாட்களுக்கு பிறகு பட்டாசு ஆலைகள் மீண்டும் திறப்பு

by Editor / 23-07-2025 12:30:13pm
9 நாட்களுக்கு பிறகு பட்டாசு ஆலைகள் மீண்டும் திறப்பு

விருதுநகர் மாவட்டத்தில் 9 நாட்களுக்கு பிறகு பட்டாசு ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டன. தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி, விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலைகளில் கடந்த 14ஆம் தேதி முதல் 15 குழுக்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் சிவகாசி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டிருந்தன. ஒத்துழைப்பு வழங்காத ஆலைகளை மூட தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்த நிலையில், 9 நாட்களாக மூடப்பட்டிருந்தன.

 

Tags :

Share via