கள்ளக்காதல் பெண்களுக்கு கருக்கலைப்பு.. பரபரப்பு தகவல்

கடலூர் புதுப்பாளையம் சக்கரபாணி தெருவில் உள்ள எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வந்த தம்பதி கைது செய்யப்பட்டனர். சிவகுருநாதன் (55), அவரது மனைவி உமாமகேஸ்வரி (40) ஆகியோருடன், 6 பேரை போலிசார் கைது செய்தனர். குறிப்பாக இங்கு கள்ளக்காதலில் கருவுறும் பெண்கள் தான் அதிக அளவில் வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவிகளும் வந்து சென்றதாக கூறப்படுகிறது.
Tags :