இன்று விஸ்வகர்மா ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இன்று விஸ்வகர்மா ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது .விஸ்வகர்மா சுயம்புவாக தோன்றியவராகவும் உலகை படைத்தவராகவும் பிரம்மாவின் மகன் என்றும் கருதப்படுகிறார் .கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாராவையும் பாண்டவர்களுக்கு இந்திர பிரஸ்டத்தை -அரண்மனையையும் கட்டினார் என்றும் தேவர்களுக்கு பல அரிய ஆயுதங்களை படைத்து தந்தவர் என்றும் தெய்வீக சிற்பி என்றும் படைப்பு கடவுள் என்றும் ரிக் வேதம் குறிப்பிடுகின்றது.
இந்துக்களின் புனித பாரம்பரிய தொழில் கடவுளாக விஸ்வகர்மா அழைக்கப்படுகிறார். பூலோக மாந்தர்களுக்கு நன்மை புரியும் பொருட்டு அவர் பூலோகத்தை வடிவமைத்த , அவர் தோன்றிய தினத்தை விஸ்வகர்மா ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள். அனைத்து தொழில் செய்பவர்களுக்கும் முதன்மைதெய்வமான பிரம்மாவின் வழித்தோன்றலாக விஸ்வகர்மா வழிபடப்படுகிறார். இவர் பிரபஞ்சத்தை படைத்தவர் என்பதால் படைப்பு கடவுளாக பார்க்கப்படுகிறார். இவருடைய சகதர்மணி காயத்ரி தேவி என்று சொல்லப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் ஐந்து தலைகள் உண்டு. பிரம்மாவிற்கும் ஐந்து தலைகளில் ஒரு தலையை சிவன் எடுத்ததாகவும் முருகன் கொய்ததாகவும் புராணக் கதைகள் சொல்லுகின்றன .இந்துமத தெய்வங்களில் மும்மூர்த்திகளில் ஒருவரின் மகனான விஸ்வகர்மா பூலோகத்தை- பூலோகத்தில் உள்ள மனிதர்களின் வாழ்வியலுக்கான கருவிகளையும் அதற்கான வல்லமைகளையும் வழங்க கூடியவராக திகழ்கிறார். இந்தியா முழுவதும் தமிழ்நாட்டை தவிர்த்து விஸ்வகர்மா ஜெயந்தி வரையறுக்கப்பட்ட விடுமுறை தினமாக உள்ளது. நேபாளம் ,கொல்கத்தா போன்ற பகுதிகளில் விஸ்வகர்மா ஜெயந்தி வெகு விமசையாக கொண்டாடப்படுகிறது.
Tags :