செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

by Staff / 11-01-2024 02:09:12pm
 செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜுன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு இதுவரை 14 முறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 15வது முறையாக வரும் ஜனவரி 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீது நாளை தீர்ப்பு அளிக்கப்படவுள்ள நிலையில், நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories