சட்டக் கல்லூரிமாணவி பவித்ரா தூக்கிட்டு தற்கொலை இறப்பில் சந்தேகம்பெற்றோர்கள் போராட்டம்.

by Staff / 25-08-2025 11:37:24pm
சட்டக் கல்லூரிமாணவி பவித்ரா தூக்கிட்டு தற்கொலை இறப்பில் சந்தேகம்பெற்றோர்கள் போராட்டம்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில்தங்கப்பழம் சட்டக்கல்லூரி செயல்பட்டுவருகிறது. பவித்ரா என்ற  மாணவி  வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் கல்லூரி தங்கும் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார் இந்த நிலையில். பவித்ரா மர்மமான முறையில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

 இதனை அடுத்து அவருடைய பெற்றோருக்கு எந்தவிதமான தகவல் அளிக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது இதனை அறிந்த பெற்றோர்கள் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் கோடங்கிபட்டி ஊரிலிருந்து கிளம்பி வந்து மகள் எங்கே என்று கேட்ட பொழுது நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் பெண் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது காதலித்ததாக கூறி மன உளைச்சல் இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டதால் பவித்ராவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்து  காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். தன  மகள் இறந்து விட்டாள் தனது மகளை காதலித்ததாக சொல்லக்கூடிய அந்தப் பையனை காட்டுங்கள் என காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பவித்ராவின் பெற்றோர் தேனி மேற்கு மாவட்டம் மக்கள் விடுதலைக் கட்சியின் செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல் நிலையத்தில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டதாலும் பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

தொடர்ந்து காலையிலிருந்து மாலை வரை நீடித்த போராட்டமானது முடிவுக்கு வராமல் பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது மகள் இருந்தும்ஒரு நாள் முடிவடைந்த நிலையில் எந்தவிதமான முடிவு எட்டப்படாமல் இருந்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக மாணவினுடைய உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால்  மேலும் மாணவியினுடைய  பெற்றோர் கல்லூரி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் மேலும் கல்லூரியின் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி வருகின்றனர் எங்கள் தரப்பினுடைய வாதத்தை எதுவும் கேட்காமல் காவல்துறையினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி போராட்டம் நடைபெற்றது மேலும் போராட்டமும் பேச்சுவார்த்தையும் மாறி மாறி நடைபெற்ற எந்தவிதமான நிலை எட்டப்படாமல் தொடர்ந்து பரபரப்பான நிலை நீடித்து வந்த நிலையில் 4 வைத்து நாளான இன்று 25 ஆம் தேதி மாணவியினுடைய உடலை பேச்சுவார்த்தைக்குப்பின்னர் காவல்துறையினரின் உறுதி மொழியினர் உற்வினர்கள் முன்நிலையில் அவரது பெற்றோர் பவித்ரா உடலை பெற்றுக்கொண்டனர்.


இதனால் வாசுதேவநல்லூர் பகுதியில் காலையில் இருந்து பரபரப்பான நிலை காணப்பட்டது.

 

Tags : சட்டக் கல்லூரிமாணவி பவித்ரா தூக்கிட்டு தற்கொலை இறப்பில் சந்தேகம்பெற்றோர்கள் போராட்டம்.

Share via