பெரியார் நகர் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

by Admin / 26-08-2025 01:00:54am
 பெரியார் நகர் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

 சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகர் புதிய பேருந்து நிலையத்தையும் திருவிக நகரில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தையும் ஜி கே எம் காலனி ஏழரை கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு அரங்கத்தையும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக ராஜா தோட்ட பகுதியில் 27.71 கோடி ரூபாய் செலவில் 162 அடுக்குமாடி குடியிருப்புகளையும் திறந்து வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் வழங்கினார். அத்துடன் 104.43 கோடி மதிப்பீட்டிலான புதிய 248 விடியல் பயண பேருந்துகளையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். .ஜி கே எம் காலனியில் குளம் மற்றும் பூங்காவில் 74.50 லட்சம் செலவில் குளிர்சாதன வசையுடன் கூடிய நவீன பெண்கள் உடற்பயிற்சி மையத்தையும் திறந்து வைத்தார். உடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் சேகர் பாபு அமைச்சா்சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 பெரியார் நகர் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
 

Tags :

Share via