பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர வாய்ப்பு

by Staff / 13-10-2023 12:08:23pm
பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர வாய்ப்பு

காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால், உலகிற்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்தப்போவதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதல்களை கடந்த 6 நாட்களாக நடத்தி வருகிறது. கத்தாரின் இந்த முடிவால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. கத்தாரை தொடர்ந்து, எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கும் இதே முடிவு எடுத்தால், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயரும்.

 

Tags :

Share via

More stories