12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

தமிழ்நாட்டில் சுமார் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
2024-25 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 95.03% என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56% என்பது குறிப்பிடத்தக்கது.
1. அரசுப் பள்ளிகள் – 91.94%
2. அரசு உதவி பெறும் பள்ளிகள்- 95.71%
3. தனியார் சுயநிதிப் பள்ளிகள்- 98.88%
தேர்வெழுதிய மொத்தப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை : 7,92,494
மாணவியர்களின் எண்ணிக்கை : 4,19,316
மாணவர்களின் எண்ணிக்கை : 3,73,178
மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி:
தேர்ச்சியடைந்த மாணவர்கள்: 3,47,670 (93.16%)
தேர்ச்சியடைந்த மாணவிகள்: 4,05,472 (96.70 %)
முடிவுகளை
www.tnresults.nic.in
மற்றும்
www.dge.tn.gov.in
ஆகிய இணையதளங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
Tags : 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.