தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஆா்த்திகா (17) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 08) காலை 9 மணிக்கு வெளியானது. இந்நிலையில், தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை