பாஜக - அதிமுக கூட்டணி, வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி-சுப்பிரமணியன் சுவாமி

by Editor / 12-04-2025 10:58:10am
பாஜக - அதிமுக கூட்டணி, வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி-சுப்பிரமணியன் சுவாமி

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவருக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், நயினார் நாகேந்திரனை தவிர வேறு யாரும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவில்லை. இதனால், அவர் போட்டியின்றி மாநிலத் தலைவராக தேர்வாக இருக்கிறார்.இந்தநிலையில் 

பாஜகவின் நயினார் நாகேந்திரன் தலைமையிலான புதிதாக மறுசீரமைக்கப்பட்ட பாஜக - அதிமுக கூட்டணி, வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அதிமுக, பாஜக கூட்டணி உறுதியான நிலையில், இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள  சுப்பிரமணியன் சுவாமி, நயினார் நாகேந்திரன் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டால், மூன்றில் இரண்டு பங்கு இடங்களுடன் வெற்றி பெறுவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.

 

Tags : பாஜக - அதிமுக கூட்டணி, வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி-சுப்பிரமணியன் சுவாமி

Share via