தமிழ்நாடு முழுவதும்இழப்பீடுகளை வழங்க பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி 1,303 வழக்குகள் நிலுவை.

by Editor / 12-04-2025 10:53:46am
தமிழ்நாடு முழுவதும்இழப்பீடுகளை வழங்க பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி 1,303 வழக்குகள் நிலுவை.

ராணிப்பேட்டையில் பெல் நிறுவன ஆலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட தங்களது நிலத்துக்கு உரிய இழப்பீட்டை வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சேட்டு, சந்திரசேகர் ஆகியோர் 2017 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில், உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் ஆயிரத்து 521 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி ஆயிரத்து 222 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக வருவாய்த் துறை செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், 2024ஆம் ஆண்டு டிசம்பர் வரை 806 கோடியே 22 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதாகவும், இந்த இழப்பீடுகளை வழங்கும்படி பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி 1,303 வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும், இந்த தொகைகளை விரைந்து வழங்க ஏதுவாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Tags : தமிழ்நாடு முழுவதும்இழப்பீடுகளை வழங்க பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி 1,303 வழக்குகள் நிலுவை.

Share via

More stories