SSI கொலை.. ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

by Editor / 07-08-2025 02:20:00pm
SSI கொலை.. ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு ஓ. பன்னீர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவல் ஆய்வாளர் படுகொலை மதுபோதையில் நடந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் கொலை மரணங்கள் தினமும் நடக்கின்றன. தமிழ்நாடு முதல்வர் சட்டம் ஒழுங்கில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via