அண்ணாமலையுடன் நிற்கும் நிகிதா புகைப்படம்-நயினார் விளக்கம்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில், அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது பலரும் புகார் கொடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் அஜித் குமார் மீது புகாரளித்த நிகிதா, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் நிற்கும் புகைப்படம் வைரலானது. இந்நிலையில், சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், "முருகன் மாநாட்டிற்கும் நிகிதாவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நாங்கள் ஒரு இடத்திற்கு செல்லும் போது, நிறைய பேர் புகைப்படம் எடுத்து கொள்வார்கள். புகைப்படம் எடுப்பவர்களின் பின்னணி என்ன என்பது எங்களுக்கு தெரியாது" என்று தெரிவித்துள்ளார்.
Tags : அண்ணாமலையுடன் நிற்கும் நிகிதா புகைப்படம்-நயினார் விளக்கம்.