புதுக்கோட்டையில் அரசு மருத்துவ ரின் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அரசு மருத்துவரின் வீட்டில் பூட்டை உடைத்து 200 சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஆசிப் முகமது என்ற மருத்துவர் நேற்றிரவு புதுக்கோட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் ஆட்கள் இல்லாத சமயத்தில் பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் மருத்துவர் வீட்டிலும் அதற்கு அருகில் இருந்த வீட்டிலும் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களும் திருடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
Tags :