காதலியை கொலை செய்து இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட காதலன்

by Staff / 12-11-2022 02:10:47pm
காதலியை கொலை செய்து இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட காதலன்

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் அபிஜித் என்பவருக்கும் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரைச் சேர்ந்த சில்பா என்ற பெண்ணுக்கும் சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நட்பாக பழகி வந்த நிலையில், நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் பேசிவந்த நிலையில், அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடனும் உடன் சில்பா நெருக்கமாக பழகத் தொடங்கியுள்ளார். சில்பா இருவரிடமும் நைசாக ஆசை வார்த்தைகளைப் பேசி ரூ.12 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்ற முயன்றதாக கூறப்படுகிறது.சில்பாவின் மோசடி வேலை அபிஜித் மற்றும் அவரது கூட்டாளிக்கு தெரியவர அந்த பெண்ணை கொலை செய்ய அபிஜித் திட்டமிட்டுள்ளார். ஜபல்பூர் வந்த அபிஜித் அங்குள்ள தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கி சில்பாவை வரவழைத்தார். அங்கு வந்த சில்பாவை கழுத்தறுத்து கொலை செய்து, ரத்த வெள்ளத்தில் துடிக்கும் சில்பாவை வீடியோ எடுத்த அபிஜித், தன்னை ஏமாற்றியதற்காகத்தான் இந்த தண்டனை செய்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.அந்த வீடியோவை அபிஜித் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Tags :

Share via

More stories