நேபாளத்தில் வெள்ளம்: 18 பேர் உயிரிழப்பு

by Editor / 21-06-2021 09:41:37am
நேபாளத்தில் வெள்ளம்: 18 பேர் உயிரிழப்பு

 


நேபாளத்தில் கடந்த ஒரு வார காலமாக பெரும் மழை பெய்துவருகிறது.
இதன் காரணமாக தலைநகர் காத்மண்டுவிற்கு அருகேயுள்ள சித்துபால்சௌக் என்ற பகுதியில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இந்தப் பாதிப்பில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21 பேர் மாயமாகியுள்ளனர். அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், மீட்புப் பணியில் ராணுவம், காவல் துறை ஈடுபட்டுள்ளது.காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த காவல் துறை, வெள்ளப் பாதிப்பு காரணமாக கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.ஒரு வாரத்திற்குள் அடிப்படை புனரமைப்புப் பணிகள் நிறைவுபெறும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.!
 

 

Tags :

Share via

More stories

Logo