சென்னை;சாலையில் ஓடிய காரில் திடீர் தீ

by Editor / 21-06-2021 09:44:11am
சென்னை;சாலையில் ஓடிய காரில் திடீர் தீ

சென்னை புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் காளிராஜ் இவர் சென்னை தாம்பரத்தில் தனது சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தபோது புழல் சைக்கிள்
ஷாப் மேம்பாலம் அருகே காரின் முன்பக்கத்தில் என்ஜினில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு
கார் பற்றி எரிந்தது .

உடனடியாக காரில் இருந்து இறங்கிய காளிராஜ் இதுகுறித்து செங்குன்றம் தீயணைப்புத் துறைக்கு அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை போராடி அணைத்தனர் இதில்
கார் முற்றிலுமாக எரிந்து சேதமாகியது. அதிர்ஷ்டவசமாக கார் ஓட்டுநர் காளிராஜ் உயிர் தப்பினார் .

காரில் தீ பிடித்த சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo