" ரூ.1000 பஸ் பாஸ் ஜூலை 15 வரை செல்லும்" - அமைச்சர் ராஜகண்ணப்பன்

by Editor / 21-06-2021 09:46:19am

 

தமிழகத்தில் கொரோனா காரணமாக வருகின்ற 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இருப்பினும் நோய் தொற்று பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு நேற்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பொது போக்குவரத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, குளிர்சாதன வசதி இல்லாமலும் 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ஏற்கனவே வாங்கிய ரூ.1000 பஸ் பாஸ் ஜூலை 15ம் தேதி வரை செல்லும். சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டில் பேருந்துகள் சேவை தொடங்கிய நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் கட்டணமின்றி பயணம் செய்ய அடையாள அட்டை கட்டாயம்.பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ,திருநங்கைகளுக்கு என மூன்று வகை கலரில் இலவச பஸ் டிக்கெட் வினியோகம் செய்யப்படும். சென்னையில் 1792 பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளன. சென்னையில் அரசு பேருந்துகள் இரவு 9.30 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.மக்கள் கூட்டத்திற்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” என்றார்.

 

Tags :

Share via