தூத்துக்குடிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

by Staff / 21-12-2023 12:58:33pm
தூத்துக்குடிக்கு  வந்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி சென்றடைந்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் ஏற்பட்ட சேதங்களை முதலில் அவர் பார்வையிட்டார். மேலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து உதவிகளை வழங்க உள்ளார். கடந்த ஞாயிறு, திங்கள் கிழமைகளில் பெய்த வரலாறு காணாத பெரு மழையால் தென் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

 

Tags :

Share via