உள்நாட்டு ஜெட் எஞ்சினை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஹெச்ஏஎல்-பிடிஏஈடபிள்யூ என்ற உள்நாட்டு ஜெட் எஞ்சினை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இந்த எஞ்சின் 200 மணி நேரத்திற்கும் மேலான 'தவறுகளற்ற' (fault-free) சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்தியாவின் ஆளில்லா போர் விமானமான கேட்ஸ் வாாியருக்கு ஆற்றல் அளிப்பதற்காக இது பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இது முன்னதாக 'லக்ஷ்யா'இலக்கு விமானங்களில் பயன்படுத்தப்பட்ட பிடிஏஈ-7 எஞ்சினின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.
இது ஒரு குறைந்த எடை கொண்ட 'டர்போஜெட்' எஞ்சின்.3.7 கிலோ நியூட்டன் உந்துவிசையை) உருவாக்கும் திறன் கொண்டது.புதிய டிஜிட்டல் எஞ்சின் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் 1,000 மணிநேர நீண்ட கால உழைப்புத்திறன்ஆகியவற்றைக் கொண்டுள்ளது.இந்த எஞ்சின் பொருத்தப்பட்ட கேட்ஸ் வாாியர் ட்ரோன் 2027-ஆம் ஆண்டில் தனது முதல் விமானப் பயணத்தை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப் படுகிறது
Tags :



















