இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தனக்கு உரிய அங்கீகாரமோ-பதவியோ வழங்கப்படவில்லை - சரத்குமார்

by Admin / 22-03-2026 04:30:19pm
 இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தனக்கு உரிய அங்கீகாரமோ-பதவியோ வழங்கப்படவில்லை - சரத்குமார்

பா.ஜ.கவில் கடந்த 2024 மார்ச் மாதத்தில் இணைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தனக்கு உரிய அங்கீகாரமோ அல்லது பதவியோ வழங்கப்படவில்லை என்று சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் சரத்குமார் இதை தெரிவித்தார். பா.ஜ.கவில் தனக்கு ஏன் பதவி தரவில்லை என்று தனது ஆதவாளர்கள் கேட்பதாகவும் தனக்கும் அந்த ஆதங்கம் இருப்பதாகவும் குறிப்பிட்ட சரத்குமார், பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழியை சுட்டிக்காட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுமை காத்த பிறகும் உரிய அங்கீகாரம் கிடைக்காதது குறித்து தனது வேதனையை அவர் வெளிப்படுத்தியதோடு தேசிய அளவில் தனக்கு பதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் தனது குறைகளை பா,ஜ,க மேல் இடத்திற்கு தெரிவிக்கப் போவதாகவும் அதுவரை தாம் கட்சியில் நீடிக்க போவதாகும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவது இல்லை என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories