எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை என பேச ஆரம்பிக்காதீங்க - தி. மு. க தலைவரும் முன்னாள் முதலமைச்சமான மு க ஸ்டாலின்

by Admin / 10-05-2026 03:05:37pm
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை என பேச ஆரம்பிக்காதீங்க - தி. மு. க தலைவரும் முன்னாள் முதலமைச்சமான மு க ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழகத் தலைவர் திரு .ஆக்டர். விஜய் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பதவி ஏற்றதும் தாங்கள் கையெழுத்திட்டு உள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை என பேச ஆரம்பிக்காதீங்க .அதெல்லாம் இருக்கு மக்களுக்கு கொடுக்க மனசும் ஆட்சி திறமையும் தான் வேணும். 5 ஆண்டுகளாக கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சனைகளையும் ஒன்றிய பா.ஜ.க அரசின் ஓர வஞ்சனையையும் சமாளிச்சு தான் நாங்கள் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு கஜனாவை துடைத்துவிட்டு சென்றுள்ளது கடந்த அரசு என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே?அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கின்றது.. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டிலேயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்கு தெரியாதா ? அதுக்கு பிறகு தான் நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்தீங்க. உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றிய திசை திருப்பாதீங்க .நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன் எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள், இப்போதுதான் அரச நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள்.. கூடிய விரைவில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப்பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துக்கள். என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.. க.. ஸ்டாலின் அறிக்கை

 

Tags :

Share via
Logo