இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி

பழனி முருகன் மாநாட்டிற்கு 99 சதவீதம் வரவேற்பு.ஜனநாயக நாட்டில் எதிர்மறை கருத்துக்கள் வருவது சகஜம். அவர்களின் கருத்துக்களையும் நாங்கள் உள்வாங்கி கொள்வோம்.
முருகன் மாநாட்டில் 21 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றதால் உலக முத்தமிழ் முருகன் மாநாடு என்று பெயர் பெற்றது.
கோவில் நிலங்கள் சுமார் 6750 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டது. ரோவர் கருவி மூலம் அளவீடு செய்யப்பட்டு அறநிலையத்துறை மூலம் எல்லை கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.
கோயில்களில் உள்ள பாரம்பரிய நகைகளை தவிர தற்போது பக்தர்களால் வழங்கப்படும் நகைகளை உருக்கி வங்கிகளில் டெபாசிட் வைக்கப்பட்டு அதன் மூலம் வரும் வட்டித் தொகை கோயில் பராமரிப்பு மற்றும் பக்தர்களுக்கு செலவு செய்யப்படுகிறது.
Tags :